Untitled Document

Official magazine website for Martyr Devasahayam

துணை வேண்டுகையாளரின் செய்தி

“நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி …… விளக்குத் தண்டின்மீதே வைப்பர்” (மத.5:14-15) என்றார் இயேசு. தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு மட்டுமன்றி, பாரத நன்னாட்டுக்கும் இந்தப் பரந்த பாருலகுக்கும் நல்லொளியாகத் திகழ்கின்றவர்தான் மறைசாட்சி அருளாளர் தேவசகாயம்பிள்ளை. சாதிவெறி, மதவெறி ஆகிய நச்சுப் போதனைகளால் இருளாகும் ஆபத்தினின்று இம்மண்ணினைக் காத்து, அவர்தம் ஒளிவீசும் இறைநம்பிக்கை, அன்பு, சகோதரத்துவம், சமத்துவம் போன்ற நற்பண்புகளின் ஒளியினை எங்கும் பரப்பிடவே இந்த இணைய தளம். இதன் வழியாக அனைவரையும் வாழ்த்தி இந்த ஒளி வட்டத்துக்குள் அன்புடன் வரவேற்கின்றேன்.

இப்படிக்கு

பணி. எ. ஜான் குழந்தை

துணை வேண்டுகையாளர்

Untitled Document