Untitled Document

Official magazine website for Martyr Devasahayam

ஆயர் விடுக்கும் செய்தி

மனிதர்களோடு உறவு கொண்டு அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்த கடவுள் தேர்ந்துகொண்ட வழிமுறைதான் “வார்த்தை”. “வார்த்தை” வழியாக அனைத்தையும் ஆக்கிய ஆண்டவர் தம் வார்த்தை வழியாகவே தம்மை வெளிப்படுத்தினார். அந்த “இறைவார்த்தை” கடவுளின் ஊடகம் எனலாம் (காண. எபி1:1-2. கத். திரு அவையின் மறைக்கல்வி,65). 'அச்சு ஊடகம்' கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரு கருவி ஆகும். மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் வாழ்வு மற்றும் செய்தியினை எல்லோர்க்கும் அறிவிக்கும் ஊடகமாகிய “இந்திய மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை” மூன்று மாதத்துக்கு ஒருமுறை மலரும் அழகுமலர்! அதன் இதழ்களின் நறுமணம் எங்கும் பரவிட உருவாக்கப்பட்ட இந்த இணையதளத்தின் வழி அனைவரையும் வாழ்த்துகிறேன். இதற்குள் வந்து பயன்பெற வரவேற்கின்றேன். மறைசாட்சியின் வேண்டுதலால் பயன்பெற ஆசி வழங்குகிறேன்!

கிறிஸ்துவில் அன்புள்ள

மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்

கோட்டாறு ஆயர்

Untitled Document